தமிழகத்தில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

0
2

தமிழகத்தில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் மேலும் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், தென்காசி மற்றும் ராமநாதபுரத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தர்ராஜையும்,.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சந்திரகலாவையும் நியமித்து அரசாணை வெளியிடபட்டுள்ளது.மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த கண்ணன், இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகேஸ்வரி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை செயலாளராகவும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சீத்தாலட்சுமி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் இணை ஆணையராக இருந்த சங்கர் லால் குமாவட், வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.இவர்களுடன், கலைச்செல்வி, வளர்மதி, ஆகாஷ் உட்பட மொத்தம் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.