தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு 309 ஆக உயர்வு

0

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு 309 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று வரை கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளார். இதில், 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று அவர் கூறினார். ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.