தமிழகத்தில் மினி தியேட்டர் கொண்டு வரவேண்டும் – பூதமங்கலம் போஸ்ட் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை!

0

தமிழகத்தில் மினி தியேட்டர் கொண்டு வரவேண்டும் – பூதமங்கலம் போஸ்ட் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை!

தமிழகத்தில் மினி தியேட்டர் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் பூதமங்கலம் போஸ்ட். இத்திரைப்படத்தை ராஜன் மலைச்சாமி இயக்கி நடித்துள்ளார். அஸ்மிதா, மவுனிகா ரெட்டி, பந்தா பாண்டி உள்ளிட்ட பல புதுமுகங்கள் இத்திரைப்படத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகமாக உள்ளனர். அர்ஜுன் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இதில் பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கே.ராஜன், “தமிழக அரசின் காலில் விழுந்து கேட்கிறேன். தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடிவிடுங்கள். 30 ஆயிரம் கோடி வருமானத்திற்காக வேறு வழியை பாருங்கள். தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு தாலியை அறுக்காதீர்கள்.

மறைந்த முதல்வர் காமராஜர் டாஸ்மாக் வருமானத்தை நம்பியா அரசாங்கம் நடத்தினார்? ஏராளமான பள்ளிக்கூடங்களை திறந்து கல்வியைக் கொடுத்த காமராஜர் இப்படியா வருவாய் ஈட்டினார். இன்று 30% பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். எனவே டாஸ்மாக் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் , நான் நடித்த முந்தானை முடிச்சு படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவருக்குப் போட்டுக் காட்டினேன். அவர் நல்ல கதையம்சம் போட்டுக் படம் என்பதால் ஹிந்தியில் நான் இந்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார். ஆனால், என்னை படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்கள் பார்த்து விட்டார்கள். இந்த மாதிரி ரோலில் நடித்தால் என்னை ஏற்றுக் கொள்வார்களா? தெரியவில்லை என்று அமிதாப் பச்சன் கூறியிருந்தார். இருந்தாலும் முந்தானை முடிச்சு படம் அமிதாப் பச்சன் அவர்களுக்கு பிடித்துப் போனதால் தயாரிப்பாளரிடம் சொல்லி என் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன். நீங்களும் பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை படம் எதிர்பார்த்தபடி அமையாமல் போனால் யாரும் கஷ்டப்படக் கூடாது என்று சொன்னார் அமிதாப் பச்சன். ஆனால், அமிதாப் பச்சன் சொன்னதற்கு தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளவில்லை. மேலும், ஹிந்தியில் முந்தானை முடிச்சு படத்தில் கடைசி வரை நடிகர் அமிதாப் பச்சன் அவர்களால் நடிக்க முடியாமல் போனது என்று பாக்கியராஜ் தெரிவித்திருந்தார்.