தமிழகத்தில் நிறைவடைந்தது வாக்குப்பதிவு!

0

தமிழகத்தில் நிறைவடைந்தது வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நிறைவுபெற்றது.

பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

அதன்படி, ஏப்ரல் 18 ஆம் தேதி (இன்று) தமிழகத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நடிகர்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்துச் சென்றனர்.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக வேலூர் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், 38 தொகுதிகளுக்கு வாக்குபதிவ நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

சித்திரை திருவிழா காரணமாக, மதுரையில் மட்டும் 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 6 மணிக்குள் வாக்குசாவடிக்கு வந்து டோக்கன் பெற்றவர்கள் தொடர்ந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.