தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு : முன் ஏற்பாடுகள் தீவிரம்

0
199

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு : முன் ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகம் முழுவதும் இருக்கும் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் நாளை 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்திலிருந்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி நடைப்பெற்று வருகிறது.

 

நாளை வாக்குப்பதிவின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர் பணியாளர்கள், காவல்துறையினர், ஓய்வுப் பெற்ற ராணுவத்தினர் என 3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மேலும் வாக்கு பதிவுகள் முடிந்த உடன், வாக்குப்பதிவு எந்திரங்கள், அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சென்று அங்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும். அதற்காக விரிவான முன்னேற்பாடுகளும் நடைப்பெற்று வருகிறது.

 

இதேபோல வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள், கட்சி ஏஜென்ட்கள் செல்வதற்கு என தனி வரிசைகள் அமைத்து, மூங்கில் தடுப்புச் சுவர்கள் அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குப்பதிவின் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. மேலும் இன்று மாலைக்குள் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியாளர்களின் கட்டுபாட்டு வளையத்திற்குள் அனைத்து வாக்குச்சாவடிகளும் கொண்டுவரப்படும்.