தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் குணமடைந்தார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

0

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் குணமடைந்தார்: அமைச்சர் விஜயபாஸ்கர்

“சென்னையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் குணமடைந்து விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில் அவர் பணிபுரிந்த சலூனுக்கு வந்து சென்றோர், ரயிலில் உடன் பயணம் செய்தவர்கள் உள்பட ஏராளமானோரை அரசு கண்காணித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதித்த இரண்டாவது நபரான அந்த இளைஞர் குணமடைந்து வருவதாகவும், இருமுறை நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று நீங்கியது உறுதி செய்யப்பட்டதாகவும் டிவிட்டரில் நேற்று இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இன்னும் இரு நாட்களில் அந்த இளைஞர் வீடு திரும்பலாம் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு இளைஞருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார்.