தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்கப்படும் : அமைச்சர் சேகர்பாபு உறுதி!

0
13

“தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்கப்படும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தனியார் அமைப்பு சார்பில் முழு ஊரடங்கு முடியும்வரை மூன்று வேலையிலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்க முதல்வர் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார். இதையோட்டி ராஜீவ் காந்தி மருத்துவமனை வாயிலில் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் மற்ற அரசு மருத்துவமனை அருகிலும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

வைரஸ் பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், கட்சி சார்பில் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தி.மு.கவினர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். மேலும், இந்துசமய அறநிலையத்துறை எந்த வித ஒளிவு மறைவும் இன்றி வெளிப்படையாக இருக்கும்” என தெரிவித்தார்.

“தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச உணவு வழங்கப்படும்” : அமைச்சர் சேகர்பாபு உறுதி!
பின்னர், ஈஷா யோகம் மையம் மீதான நில அபகரிப்பு புகார் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு, அமைச்சர் சேகர் பாபு, “எங்கு, யார் தவறு செய்தாலும் அது எங்களது கவனத்திற்கு வந்தால் தி.மு.க ஆட்சியில் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

மேலும் ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனத்தை இந்து அறநிலைய துறையே ஏற்று நடத்தும் என தகவல் வெளியான நிலையில் இன்று மாலை ஶ்ரீரங்கம் ஜீயர் தேர்வு தொடர்பாக இந்து அறநிலைய துறை சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு பிறகு ஶ்ரீரங்கம் ஜீயர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.