தனுஷ் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார், கணவரை பிரிய அவர் காரணமா? அமலாபால் பேச்சு!

0

தனுஷ் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார், கணவரை பிரிய அவர் காரணமா? அமலாபால் பேச்சு!

அமலாபால் அவரது கணவர் விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இதற்கு காரணம் தனுஷ் என்று முன்பு புரளி கிளம்பியது. இதற்கு அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்…

“ நானும் என் கணவர் விஜய்யும் விவாகரத்து கேட்டு பிரிந்ததற்கு காரணம் தனுஷ் என்று கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை. இந்த வி‌ஷயத்துக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நானும் விஜய்யும் பிரிய முடிவு செய்ததை அறிந்த தனுஷ் அதிர்ச்சி அடைந்தார். பிரிய வேண்டாம் என்று எவ்வளவோ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

தனுஷ் எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான். அதைத் தவிர எங்களுக்குள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது அவருடன் என்னை சேர்த்து பேசுவது மோசமானதாக இருக்கிறது. வருத்தம் அளிக்கிறது.

தனுஷ் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். எதுவுமே இல்லாமல் என்னையும், தனுசையும் பற்றி ஏதேதோ பேசப்படுவதால் அவரைப் பார்க்க கூட சங்கடமாக இருக்கிறது”  ஆவேசமாக கூறினார்.