“டெல்லியின் காற்று மாசு தமிழ்நாட்டிற்‌கு பரவாது”- இந்திய வானிலை மையம்

0

“டெல்லியின் காற்று மாசு தமிழ்நாட்டிற்‌கு பரவாது”- இந்திய வானிலை மையம்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழ்நாட்டிற்கு பரவாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளை பாதிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார். டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு வழக்கத்தைவிட 5 மடங்கு அதிகரித்துள்ளதால், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அடுத்த வாரத்தில் மந்தமான வானிலை இருக்க வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் கூறியிருந்தார்.

இதனை மறுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் பாலச்சந்திரன், டெல்லி தமிழ்நாட்டிலிருந்து மிக தூரத்தில் உள்ளதாகவும், இரு நகரங்கள் இருக்கும் அட்சரேகை வெவ்வேறாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையில் மலைப்பகுதிகள் உள்ள நிலையில், தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கிலிருந்து தமிழ்நாட்டிற்கு காற்று வீசுவதால் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு தமிழ்நாட்டை பாதிக்காது என பாலச்சந்திரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.