‘ஞாயிறு டபுள்ஸ்’ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பாதிக்குமா!

0

‘ஞாயிறு டபுள்ஸ்’ ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பாதிக்குமா!

ஜூன் 23ம் திகதி விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது. மூன்றாவது சீசனாக நடைபெறவுள்ளது இந்த நிகழ்ச்சியை இம்முறையும் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்துவழங்கவுள்ளார்.

வழமையாகவே பிக் பாஸ் ஆரம்பித்ததும் மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கெல்லாம் சற்று சரிவுகாலம்தான். இம்முறை தங்களை காப்பாற்றிக்கொள்ள சன் தொலைக்காட்சி புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

கடந்த ஞாயிறு வரை சன் தொலைக்காட்சியில் பட்டிக்காடா பட்டிணமான்னு ஒரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகியது அதை இனிவரும் வாரங்களில் நிறுத்திவிட்டு மாலை 6 . 30 இல் இருந்து “ஞாயிறு டபுள்ஸ்” எனும் தலைப்பில் இரண்டு படங்களை இடைவெளியில்லாமல் ஒளிபரப்பவுள்ளது. இந்த முயற்சி பிக் பாஸ் நிகழ்ச்சியை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.