ஜே.கே. ரித்திஷ் காலமானார்: தம்பியை இழந்த சோகத்தில் உள்ளேன் – நாசர் இரங்கல்

0
285

ஜே.கே. ரித்திஷ் காலமானார்: தம்பியை இழந்த சோகத்தில் உள்ளேன் – நாசர் இரங்கல்

நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.

சின்ன புள்ள படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான ரித்திஷ், சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் நடித்திருந்தார்.

46 வயது ரித்திஷின் மறைவு குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், கூறியதாவது:

ரித்திஷின் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ரித்திஷ் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவார். தென்னிந்திய நடிகர் தேர்தலில் அவருடன் பயணித்தேன். அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர். நல்ல தம்பியை இழந்துவிட்டேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, ஜே.கே. ரித்திஷ் மறைவு அதிர்ச்சியை அளிக்கிறது. ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

.கே. ரித்திஷின் மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

ஜே கே ரித்தீஷ் மறைவால் தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பாக கருதுகிறேன் என  இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.