ஜெயலலிதா குணமடைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பிராத்தனை: சந்திரபாபு நாயுடு உத்தரவு

0

உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு சேவையாற்ற விரைவில் குணமாக வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருக்கமாக கூறினார்.

இதுகுறித்து இன்று அவர் விஜயவாடாவில் கூறும்போது, ”உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் குணமடைந்து மீண்டும் மக்களுக்கு தொண்டு செய்வார். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

ஏழுமலையானின் அருளால் அவர் மீண்டு வந்து ஆட்சி புரிவார். அவர் குணமடைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பிராத்தனை நடத்தி விரைவில் அவருக்கு லட்டு, தீர்த்த பிரசாதம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.