‘ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது’ – சபாநாயகர் அப்பாவு!

0
70

‘ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது’ – சபாநாயகர் அப்பாவு!

தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர்ஜனவரி 6-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்ற உள்ளதாகவும் சட்டமன்ற முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு,” 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் கூடும், 2025 ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்குகிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,” இந்த முறையாவது அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிப்பார் என நம்புகிறேன். கடந்த முறை முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் மட்டுமே ஆளுநர் படித்தார். சட்டப்பேரவையில் ஆளுநருக்கு உரை நிகழ்த்ததான் அனுமதியே தவிர, சொந்த கருத்துகளை சொல்ல அனுமதி இல்லை.

அவையின் உள்ளே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 உறுப்பினர்களுக்கு மட்டுமே கருத்து சொல்ல அனுமதி. இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம். சட்டப்பேரவைக்கும் இது பொருந்தும். மேலும் இந்த ஆளுநர் உரை கூட்டமானது எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது தொடர்பாக அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என சபாநாயகர் கூறினார்.