சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார் முதலமைச்சர்

0
103

சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார் முதலமைச்சர்

சேலம்: தமிழக சட்டசபைக்கு இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.

காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், பேரனை ஓட்டுப்போடும் இடம் வரை அழைத்துச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.