சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம்

0

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம்

 

முதல்வர் மறைவை அடுத்து தமிழகத்தில் ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.