சென்னை மாநகராட்சி வார்டுகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்

0
73

சென்னை மாநகராட்சி வார்டுகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. 153 வார்டுகளில் அமோகமாக வெற்றி பெற்றுள்ளது.

அ.தி.மு.க. 15 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. சுயேட்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.

ஒரு சில வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

கொளத்தூர், துறைமுகம், சைதாப்பேட்டை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்றனர்.

தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீதனி 8,100 ஓட்டுகள் வித்தியாசத்திலும், பரிதி இளம்சுருதி 6 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், தனசேகரன் 11 ஆயிரம் ஓட்டுகள் பெற்றும் வெற்றி பெற்றுள்ளனர்.

இது தவிர 75-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ரமணி எதிர்த்து போட்டியிட்டு அ.தி.மு.க. வேட்பாளரை விட 11,473 ஓட்டுகள் பெற்றார்.

105-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அதியமான் 13,051 ஓட்டுகளும், 65-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் சாரதா 12,675 ஓட்டுகளும். 127-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் லோகு 12,655 வாக்குகளும், 114-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மதன்மோகன் 10,890 வாக்குகளும், 169-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் மகேஷ்குமார் 11,012 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

100-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் வசந்தி 11,244 ஓட்டுகளும், 95-வது வார்டில் சுதா தீனதயாளன் 11,811 ஓட்டுகளும், 44-வது வார்டில் சர்பஜெயதாஸ் 10,775 ஓட்டுகளும் குவித்தனர்.

109-வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 8,082 ஓட்டுகளும், 94-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் கே.பி.ஜெயின் 9,036 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் அவர்கள் டெபாசிட் இழந்தனர்.