சென்னை மக்களை வீட்டுக்குள்ளே இருக்க – களமிறங்கியது கமாண்டோ படை..! தமிழக அரசு அதிரடி!! வீடியோ

0

சென்னை மக்களை வீட்டுக்குள்ளே இருக்க – களமிறங்கியது கமாண்டோ படை..! தமிழக அரசு அதிரடி!!

சென்னை: தலைநகர் சென்னையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறங்கி உள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. முழு முடக்கம் அமலில் இருந்தாலும் கொரோனா கட்டுக்குள் இல்லை.

சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

ஆனால் அதனையும் மீறி சிலர் பாதுகாப்பு இல்லாமல் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவது முககவசம் அணியாமல் இருப்பது போன்ற விதிமீறல் செய்து வருகின்றனர். இதனால் வேகமாக தொற்று பரவி வருகிறது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47,650ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகம். ஆனாலும் மக்கள் நடமாட்டம் குறையவில்லை.

இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், பலன் இல்லை. ஆகவே, தற்போது கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் காணப்படும் கொருக்குப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்த படை அணிவகுப்பு நடத்தியது.

அப்போது வெளியே நடமாடிய மக்களை எச்சரித்து அனுப்பினர். வட சென்னையில் கொரோனா அதிகமாகி உள்ளதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை தற்போது களமிறக்கப்பட்டுள்ளது, பலனை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.