சென்னையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று இரவில் இருந்து காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை மழையின் அளவு அதிகரித்தது.
இதனால் சாலைகளில் ஓடும் வெள்ளத்தின் அளவு கூடியது. இதனால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் 11 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளது. 7 சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.