சென்னையில் நெபோமார்ட் (NEBO MART) கிளை தொடக்கம்

0

சென்னையில் நெபோமார்ட்

(NEBO MART ) கிளை தொடக்கம்

சென்னை கீழ்ப்பாக்கம் செக்ரட்ரியேட் காலனியில் நெபோமார்ட்டின் முதல் கிளை தொடங்கப்பட்டது. இதனை சத்தியம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் திரு ஐசக் லிவிங்ஸ்டன் திறந்து வைத்தார்.

இந்த கிளையைப் பற்றி நெபோ இந்தியா சில்லறை விற்பனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேனியல் செல்வன் பேசுகையில், சென்னை சேத்பட்டில் உள்ள கிறிஸ்துவ மிஷன் தொண்டு நிறுவனம் சார்பாக ஏழைகளுக்கு கல்விவசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட ஏராளமான சேவைகளை இந்த அறகட்டளை மூலம் செய்து வருகிறோம். இதன் கிளை ஒன்று இங்கிலாந்தில் நெபோ இண்டர்நேஷனல் என்ற பெயரில் சூப்பர் ஸ்டோர்ஸ்களை திறந்து, மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சேவையையும் செய்து வருகிறது.

நெபோ இண்டர்நேஷனல் என்ற பெயரில் இங்கிலாந்தில் இயங்கி வரும் இதன் சேவையை இந்தியாவிலும் விரிவுப்படுத்த திட்டமிட்டார்கள். இதனைத் தொடர்ந்து நெபோ இந்தியா ரீடைல் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கி,வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புஅளிக்கும் நோக்கத்தில் ‘நெபோமார்ட்’ என்ற சில்லறை விற்பனை நிலையத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

சென்னை கீழ்ப்பாக்கம் செக்ரட்ரியேட் காலனியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளும், சூப்பர் ஸ்டார்களும் இருந்தாலும், காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் என பிரத்யேகமாக சில்லறை விற்பனை நிலையம் இல்லை. இதனை உணர்ந்தே நாங்கள் நெபோமார்ட் என்ற இந்த முதல் சில்லறை விற்பனை நிலையத்தைத் தொடங்கி இருக்கிறோம்.

இன்னும் ஓராண்டிற்குள் சென்னையில் மேலும் ஐந்து கிளைகளை திறந்து, மக்களுக்கு குறைந்த விலையில், காய்கறிகளையும் பழங்களையும் கிடைக்க செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

பொதுவாகவே சூப்பர் மார்க்கெட்டுகள் என்றால் மக்களிடத்தில் விலை அதிகம் என்ற மனப்பான்மை இருக்கிறது. ஆனால் எங்களுடைய நெபோமார்ட்டில் விலையும் குறைவு. தரமும் அதிகம். கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் மொத்த விலைக்கே, இங்கே சில்லறை விலையில் விற்பனை செய்கிறோம்.
.
ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், குறைந்த விலையில் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கும் அனுபவத்தை மக்களுக்கு கொடுக்கவும் தான் இதனை உற்சாகத்துடன் ஆரம்பித்திருக்கிறோம். மக்கள் அனைவரும் வருகைத்தந்து, ஆதரவளிக்க வேண்டுகிறோம்.” என்றார்.

NEBO MART super stores
nebo india retail pvt ltd,
old 53,new 89,
Secretariat colony, 2nd st,
Kilpauk, Chennai.

NEBO MART super stores