சுப்ரீம் கோர்ட் காலவரையின்றி மூடல்

0

சுப்ரீம் கோர்ட் காலவரையின்றி மூடல்

புதுடெல்லி, மார்ச் 25

நாடு முழுவதும் 21 நாள் லாக்டவுனை பிரதமர் மோடி நேற்று அறிவித்தைதத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும் காலவரையின்றி மூடப்பட்டது.

இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நேற்று நள்ளிரவில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். ஆதலால் இன்று நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த், எல்.நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் ஆகியோர் காணொலி மூலம் 15 வழக்குகளை விசாரிக்க திட்டமிட்டிருந்தார்கள்.

அதற்கான வழக்குகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஊரடங்கு உத்தரவால் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக நீதிமன்ற பணிகள்…

தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகள் அனைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரி கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தப்படுவதாக உயர்நீதிமன்ற நிர்வாககுழு அறிவித்துள்ளது. மேலும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த அவசர வழக்குகளை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட நீதிபதியின் அனுமதி பெற வேண்டும் எனவும், நிர்வாக, நீதிமன்ற அலுவல் தொடர்பாக மின்னஞ்சலில் ஐகோர்ட், ஐகோர்ட் கிளையை அனுகலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.