சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

0
57

சுதந்திர தின விழா- கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சுதந்திர தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை அவர் ஏற்றி வைத்தார். பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்ததும், விமானப்படையை சேர்ந்த இரண்டு Mi-17 ரக விமானங்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அம்மாநில முதலவர்கள் கொடியெற்றி வருகின்றனர். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக்கொடி ஏற்றினார். முன்னதாக இந்த விழாவில் செங்கோட்டைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்த விழாவில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது (5 பேர்) போன்ற பல விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழா நடத்தப்பட்டது. விழாவில் மூத்த குடிமக்கள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சுதந்திர தின விழாவையொட்டி நாடுமுழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினர், ராணுவம், தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவு, ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.