சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தை இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்  – அமைச்சர் சி.வெ.கணேசன்

0
118

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகத்தை இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்  – அமைச்சர் சி.வெ.கணேசன்

சென்னை, தமிழ்நாட்டு தலைவர்கள் உட்பட நாடு முழுவதும் பல தலைவர்கள் சிறைத் தண்டனை முதல் உயிர்த்தியாகம் வரை பல போராட்டங்களை நடத்தி நமக்கு சுதந்திரம் வாங்கித் தந்தனர். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைய நம் வாழ்க்கைக்கு அந்த தலைவர்களின் தன்னலமற்ற சேவையே காரணம் ஆகும். இன்றைய இளைஞர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்தும் தியாகிகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படை சுதந்திரம் தான் என்று தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய மத்திய மக்கள் தொடர்பகம் கள அலுவலகம்  13.8.2022 அன்று  விருத்தாசலம் ஒன்றியம் சத்தியவாடி கிராமத்தில் நடத்திய வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.  சுகாதாரத் துறைகுழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க நாடு பெற்ற சுதந்திரம் தான் காரணம். ஆண் -பெண் பாலினப் பாகுபாடு இல்லாமல் சமத்துவமாக இருக்க வேண்டும். பெண்களுக்கு சொத்துரிமைஇட ஒதுக்கீடு போன்ற அரசின் செயல்பாடுகள் பெண்களை தன்னம்பிக்கையுடன் வாழச் செய்கின்றன என்று அமைச்சர் கணேசன் மேலும் தெரிவித்தார். 

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய மாவட்ட ஆட்சியர் திரு.கி.பாலசுப்ரமணியம் 75 ஆவது சுதந்திர ஆண்டில் 75 குளங்களை அமிர்த குளங்களாக மாற்றும் முயற்சி நிறைவடைந்தது. மாவட்டத்தில் 10,000 நீர்த் தேக்க அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்று குறிப்பிட்டார். சுதந்திர தினத்தன்று பெண் தலைவர்களுக்கு பதிலாக அவர்கள் கணவர்கள் கொடி ஏற்றக் கூடாது. கொடி யார் ஏற்றுகிறார்கள் என்பதில் சாதிசமுதாய பாகுபாடு காட்டக் கூடாது என்று ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மேலும் குறிப்பிட்டார்.

நோக்கவுரை ஆற்றிய மத்திய மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம். அண்ணாதுரை இப்போது வளரும் நாடாக உள்ள இந்தியாவை வளர்ந்த நாடாக இன்னும் 25 ஆண்டுகளில் மாற்றுவது இளைஞர்கள் கைகளில்தான் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

கூடுதல் ஆட்சியர் திரு.பவன்குமார் ஜி.கிரியப்பனர் மாவட்டத்தில் உள்ள 653 கிராமங்களில் உள்ள 4,89,000 வீடுகளில் மூவர்ணக் கொடி ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.

விருத்தாசலம் சார் ஆட்சியர் திரு.சி.பழனிவிருத்தாசலம் காவல் உதவி கண்காணிப்பாளர் திரு.அங்கிஷ் ஜெயின்சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ரமேஷ் பாபுஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் டாக்டர் பழனி ஒன்றியக் குழு தலைவர் திருமிகு.மு.மலர்ஊராட்சி மன்றத் தலைவர் திரு.தி.வேல்முருகன்வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஆ.தண்டபாணிகுழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகு முல்லை அழகி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக்கு அமைச்சர் கணேசன் பரிசுகள் வழங்கியதோடு வீடுதோறும் மூவர்ணக் கொடி வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

அங்கன்வாடி மையம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் ஆகியனவும் நடைபெற்றன.

முன்னதாக புதுச்சேரி மத்திய மத்திய மக்கள் தொடர்பகம் துணை இயக்குநர் திரு. தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.எஸ்.வீரமணி நன்றி கூறினார்.

இதைத் தொடர்ந்து மத்திய மத்திய மக்கள் தொடர்பகம் பதிவு பெற்ற காரைக்கால் சகரிகா கலைக் குழுவின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.