சிலை கடத்தல் மீது முறையான விசாரணை வேண்டும் : மடாதிபதிகள் கோரிக்கை!

0

சிலை கடத்தல் மீது முறையான விசாரணை வேண்டும் : மடாதிபதிகள் கோரிக்கை!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிலை கடத்தலுக்கு அதிகமாக நடைபெறுகிறது இதன் மீது முறையான விசாரணை வேண்டும் என மடாதிபதிகள் கோரிக்கை

கோயில் சிலை திருட்டு வழக்குகளில் எவர் தவறு செய்கிறார்களோ அவர்களை முறையாக கண்டரிந்து  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோன்று சிலை திருட்டு ,சாமி நகைகள் மாயமாவது தொடர்பாக கோயில்களில் அறப்பணியில் ஈடுபடும் அறப்பணியாளர்களை குற்றம் சாட்ட கூடாது என மாடாதிபதிகள் கோரிக்கை வைத்தனர்

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து ஆச்சாரிய சபாவுடன் துறவியர் பேரவையை சேர்ந்த 15 சைவ, வீரசைவ மடாதிபதிகள் செய்தியாளர்களைை சந்தித்தனர்

பேட்டி: ஊரனஅடிகளார்; கோயில்களில் சிலை திருட்டு இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது , கோயில்களில் சிலை திருட்டு என்பது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அறநிலையத்துறை என்பது அனைவரும் கும்புடகூடிய இடம் அங்கு விசாரணை என்பது மிகவும் ஜாக்கிரதை யாக நடக்க வேண்டும்.

கர்பகரகத்து உள்ளே நடக்கும் அனைத்துக்கும் அரப்பணியாளர்களை விசரிக்கவேண்டும் அதை விட்டு விட்டு ஐ ஏ எஸ் அதிகாரியை வைத்து விசாரணை மேற்கொள்வது கர்ப கிரகத்தில் வேலை செய்பவர்களை  அவமானம் படுத்துவது போல் உள்ளது.

அதனால் இந்த விசாரணையில் சற்று சுதனமாக செயல்படவேண்டும்.

பேட்டி:மருததாசல அடிகளார்: கோயில்களை பேணி பாதுகாப்பது நமது கடமை. குற்றம் செய்தால் தண்டிக்கவேண்டும் , அவ்வாறு செய்யாமல் ஒருவர் மீது குற்றம் சுமத்தி விசாரணை மேற்கொள்வது அவரை அவமானம் படுத்துவதாக உள்ளது. குற்றம் செய்யாமல் பழி சுமத்துவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

குற்றங்கள் நிரூபணம் ஆனால் மட்டும் குற்றவாலியின் பெயரை வெளியிட வேண்டும்

சிவலிங்கேஸ்வரசாமிகள்; கோயில்களில் சிலைகள், அவற்றில் அணிவித்து இருந்த நகைகள் சரியாக உள்ளதா என்று பார்த்தால் வேறு வேராக  இருக்கிறது. இதனால் கோயில் பணிகள் செய்ய பலர் அஞ்சுகின்றனர்.

விசாரணை முறையாக நடத்தி அதன் பிறகு குற்றவாளியை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் இந்நிலை நடக்காமல் இருக்க திருப்பணி செய்பவர்கள் குற்றம் இல்லாமால் இருக்க வழி வகை செய்யவேண்டும்.

மேலும் விசாரணை முறையாக நடக்கவேண்டும்என்றும் , சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணையயை முறையாக மேற்கொண்டு உண்மை குற்றவாளியை கண்டறியப்பட்ட வேண்டும் எனவும் கூறினர்.