சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!’

0

சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!’

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள முதுமலையில் யானைகள் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் வந்துக்கொண்டிருந்தபோது, அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக்கொண்டது.

இதையடுத்து, அங்கிருந்த சிறுவனை அழைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செருப்பை கழற்றச் சொன்னார்.

பின்னர், அந்த சிறுவனும் அமைச்சரின் செருப்பை புல்வெளியில் இருந்து கழற்றினான். அப்போது, மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவர்களை எனது பேரன்கள் போல் நினைத்ததால் தான் அவர்களை உதவிக்கு அழைத்தேன்.சிறுவர்களை காலணியை கழற்ற சொன்னதில் எந்த உள் நோக்கமும் இல்லை. பெரியவர்களை அழைத்தால் தவறாகி விடும் என்பதால் சிறுவர்களை அழைத்தேன் என கூறி உள்ளார்.