சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உயர் நீதிமன்றம் உத்தரவு

0

சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உயர் நீதிமன்றம் உத்தரவு

சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்ற அனுமதியுடன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் நேற்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் ஆஜராகி, சிபிஐக்கு மாற்ற அனுமதி கோரினார்.

வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது தமிழக அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதிகள் கூறினர்.

காவல்துறை மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சாத்தன்குளம் சம்பவம் பற்றி விசாரிக்க போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், வருவாய் துறையினர் கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கொண்டுவர உத்தரவிட்டனர்.

மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் மாஜிஸ்திரேட் கைப்பற்றவும் உத்தரவிட்டுள்ளனர்