சமூக வலைத்தளங்களில் வெளிவரும் அனைத்துவகையான வீடியோ, ஆடியோ பதிவுகளுக்கு சென்சார் தேவை – பட்டுக்கோட்டை பிரபாகர்

0
315

சமூக வலைத்தளங்களில் வெளிவரும் அனைத்துவகையான வீடியோ, ஆடியோ பதிவுகளுக்கு சென்சார் தேவை – பட்டுக்கோட்டை பிரபாகர்

ரீல்ஸ் என்று உலகம் முழுதும் தயாரிக்கப்பட்ட பல வீடியோக்கள் நிஜமாக நிகழ்ந்ததை சம்மந்தப்பட்டவர்களுக்குத் தெரியாமல் சி.சி.டிவி கேமிரா பதிவு செய்ததாக டைம் பாருடன் வெளியிடுகிறார்கள்.

‘Watch till the end’ என்று நடுநடுவே ஸ்லைடு செய்தி போட்டு வாடிக்கையாளரை அதிக நிமிடங்கள் தக்கவைக்கும் யுத்தியும் உள்ளடக்கியவை இந்த வீடியோக்கள்.
அவை முழுவதுமே ஸ்க்ரிப்ட் தயாரித்து நடிகர்களை வைத்து நடிக்கவைத்து சித்தரிக்கப்பட்டவை.

விவகாரமான சம்பவங்களை சிசி டிவி கேமிரா இருப்பதை உணராமலேயே சம்மந்தப்பட்டவர்கள் நடத்துவார்களா என்று யோசித்தாலே உண்மை புரியும்.
இந்த மாதிரியான வீடியோக்களில் முழுக்க பாலியல் துரோகங்களே கதைக் களன்கள்.

அரசின் சமூகநலத்துறையும், டிராயும் இணைந்து கடுமையான சட்டதிட்டங்களை பயன்படுத்தி டிக்டாக் தடை போல இவற்றையும் தடை செய்ய வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வெளிவரும் அனைத்துவகையான வீடியோ, ஆடியோ பதிவுகளுக்கும் சென்சார் தேவை என்பதை உரத்து சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூல் பதிவு