சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய வள்ளலார் வழியை பின்பற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

0
68

சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய வள்ளலார் வழியை பின்பற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை சார்பில் 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஜீவகாருண்ய விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், ஆன்மிக தொண்டாற்றிய பெண்ணுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கினார்.
ஓசூர்: சமூக ஏற்றத்​தாழ்வு​களைக் களைய வள்ளலார் வழியை அனைவரும் பின்​பற்ற வேண்​டும் என ஆளுநர் ஆர்.என்​.ரவி வலியுறுத்​தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்​கட்டளை சார்​பில் 5-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஜீவகாருண்ய விருதுகள் வழங்​கும் விழா நேற்று நடந்​தது.

இதில், ஆளுநர் ஆர்.என்​.ரவி மற்றும் ஜீயர்​கள், மடாதிப​திகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்​டனர். விழா தொடக்​கத்​தில் தேசியகீதம் பாடப்​பட்ட பின்னர் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடப்​பட்​டது.

தொடர்ந்து, ஆன்மிக தொண்​டாற்றிய​வர்​களுக்கு ஜீவகாருண்ய விருதுகளை ஆளுநர் வழங்கி பேசி​ய​தாவது: ஒவ்வொரு உயிரும் சமம் பாரதத்​தில் அதர்மம் தலைதூக்​கும்​போது ஞானிகள் மக்களைக் காப்​பாற்றினர். அவர்களைப் போலத்​தான் வள்ளலார் அவதரித்து, அனைவரை​யும் காப்​பாற்றினார். மேலும், சனாதனம் தருமம், ஒவ்வொரு உயிரும் சமம் என்று போதித்​தார் வள்ளலார். இதை நான் தமிழகம் வரும் முன்னரே வள்ளலாரின் எழுத்து, வழிபாடுகள் குறித்து அறிந்து, அதைப் பின்​பற்றி ஆளுநர் மாளி​கை​யில் வள்ளலாருக்​குச் சிலை வைத்து வழிபட்டு வருகிறேன்.

தீண்​டா​மையை ஒழிக்​க​வும், உயர் சாதி, கீழ் சாதி என்ற நிலையை நீக்​க​வும், தங்களால் முடிந்த உதவிகளை அடுத்​தவருக்​குச் செய்ய வேண்​டும் என்று வள்ளலார் பாடு​பட்​டார். இதையே விவே​கானந்​தரும் வலியுறுத்​தினார். நம் நாட்டை ஆண்ட ஆங்கிலேயர்கள் அவர்​களது கலச்​சா​ரத்​தைக் கொண்டு வந்தனர். அப்போது பள்ளி​களில்ஆங்கில வழியில் கல்வி கற்றுக்கொடுத்​தார்​கள். இதற்கு வள்ளலார் எதிர்ப்பு தெரி​வித்து சமஸ்​கிருதம் மற்றும் தமிழில் கல்வி கற்க வலியுறுத்​தினார்.

வள்ளலாரைப் போன்ற ஞானிகள் வாழ்ந்த தமிழகம் ஒரு புண்ணிய பூமி. பல நூற்​றாண்​டு​களைக் கடந்த பின்னரும் சமூக நீதி ஏற்றத் தாழ்வு​களு​டன்​தான் உள்ளது. குறிப்​பாக, சமூக நீதி பேசும் தமிழகத்​தில் சமூக ஏற்றத்​தாழ்வுகள் இன்னும் ஒழிக்​கப்​பட​வில்லை.

அனைவரும் வள்ளலார் வழியைப் பின்​பற்றினால் அது ​முழு​மையாக அகற்​றப்​படும் என்ற நம்​பிக்கை​யுள்​ளது. வள்​ளலாரின் பக்​த​ராகப் பிரதமர் நரேந்திர மோடி நமக்​குக் கிடைத்​துள்ளார்.

இவ்​வாறு அவர்​ பேசினார்.