சசிகலாவிடம் ஜெயலலிதா கதறி அழுதார்: இணையத்தில் பரவும் வைரல் செய்தி

0

சசிகலாவிடம் ஜெயலலிதா கதறி அழுதார்: இணையத்தில் பரவும் வைரல் செய்தி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளன.

இந்நிலையில் மலேசிய நண்பன் என்ற மலேசிய தமிழ் நாளேட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த தகவல்களும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

sasi-jj-mal1

கடந்த 17-12-16 அன்று அந்த நாளிதழ் வெளியானதாக தெரிகிறது அதில் கால்கள் இல்லாது என்னால் வாழ முடியாது… என்னை கருணை கொலை செய்துவிடு சசி… என்று ஜெயலலிதா கதறியதாக கேள்வி குறியுடன் தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை தாங்கிய அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ச்சியில் உறைந்திருக்கும் தமிழக மக்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சி என்றே கூறவேண்டும்.