‘கோவை மக்களின் அன்பு!’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை கோவையில் தொடங்கி வைக்கவும், ரூ.158.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைக்கவும், இரண்டு நாள் பயணமாக கோவை சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கோவை மக்கள் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தந்த ஆதரவையடுத்து, தற்போது 3ஆவது முறையாக கோவை சென்றிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
இந்நிலையில், முதலமைச்சருக்கு கோவை மக்கள் பெரும் திரளாக கூடி மாபெரும் வரவேற்பளித்தனர். இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில்,
“நல்லா இருக்கீங்களா தலைவரே…”
எனக் கோவை விமான நிலையம் முதல் ELCOT வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு!
4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது!
கோவை மக்களின் அன்பு!💗 என நெகிழவைக்கும் படங்களுடன் பதிவிட்டுள்ளார்.