கோலாகலமாக ‘சென்னை தினம்’ குப்பை, கழிவுகளால் சீரழிந்துக் கிடக்கும் நீர்நிலைகள்! ஆறுகள், கால்வாய்களை சீரமைக்க மநீம வலியுறுத்தல்!!

0
305

கோலாகலமாக ‘சென்னை தினம்’ குப்பை, கழிவுகளால் சீரழிந்துக் கிடக்கும் நீர்நிலைகள்! ஆறுகள், கால்வாய்களை சீரமைக்க மநீம வலியுறுத்தல்!!

தமிழகத்தின் தலைநகரில் ஒருபுறம் ‘சென்னை தினம்’ கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மலைபோலக் குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளால் துர்நாற்றமும், சுகாதாரச் சீர்கேடும் உண்டாகி, மக்களைப் பரிதவிக்கச் செய்கிறது.

நகரின் முக்கிய நீர்நிலைகளில் 357 இடங்களில் கழிவுநீர் கலப்பதாகக் கண்டறியப்பட்டு 10 ஆண்டுகளாகியும், அதை இன்னும் முழுமையாகத் தடுக்கவில்லை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம். அடையாறு, கூவம் ஆறுகளிலும், பக்கிங்ஹாம் கால்வாயிலும் குப்பை, கழிவுகள்தான் நிரம்பியுள்ளன.

நீர்நிலைகள் சீரமைப்புக்காக இதுவரை பல்லாயிரம் கோடி செலவிடப்பட்டும், நீர்வழிச் சாலைகள் சாக்கடைக் கால்வாய்களாகவே உள்ளன. இனியும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல், குப்பை, கழிவுகளை முழுமையாக அகற்றி, பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.