கோடிக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்திற்கு எங்களை சார்ந்துள்ளனர்: டிக் டாக் அறிக்கை

0

கோடிக்கணக்கானவர்கள் வாழ்வாதாரத்திற்கு எங்களை சார்ந்துள்ளனர்: டிக் டாக் அறிக்கை

புதுடில்லி: மத்திய அரசு தடை செய்துள்ள 59 சீன செயலிகளில் பிரபல சமூக ஊடக செயலியான டிக் டாக், தனது பயனர்களைப் பற்றிய எந்த தகவலையும் சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசாங்கத்திற்கும் அனுப்பவில்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறு செய்ய மாட்டோம் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, மாநில பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு ஆபத்து விளைவிப்பதாக கூறி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று (ஜூன் 30) இரவு தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

டிக் டாக் தடை தொடர்பாக அந்நிறுவனத்தின் இந்திய தலைவர் நிகில் காந்தி செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டிக் டாக்கை 14 இந்திய மொழிகளில் கிடைக்கச் செய்து, இணையத்தை ஜனநாயகப்படுத்தியுள்ளோம். கோடிக்கணக்கான பயனர்கள், கலைஞர்கள், கதை சொல்லிகள், கல்வியாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இதனை சார்ந்துள்ளனர். அவர்களில் பலர் முதல் முறை இணைய பயனர்கள். இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து தனியுரிமை தரவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கும் டிக் டாக் தொடர்ந்து இணங்குகிறது. மேலும் இந்தியாவில் உள்ள எங்கள் பயனர்களின் எந்த தகவலையும் சீன அரசு உட்பட எந்த வெளிநாட்டு அரசாங்கத்துடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.