கொரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு கமல் கொடுத்த சூப்பர் ஐடியா…!

0

கொரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு கமல் கொடுத்த சூப்பர் ஐடியா…!

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. அங்கு 3,245 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி இருகின்றனர். சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா மற்ற நாடுகளில் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி அதிகரித்து 4,023 உயர்ந்திருக்கிறது. மேலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 627 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்குள் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை ஓட்டமாக நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும், மால்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், அருட்காட்சியம், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன், தனிமைபடுத்துதல் குறித்து மக்களுக்கு உள்ள அச்சத்தை போக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னய்யா வீட்டிலையே இருக்க சொல்றீங்க. வருமானத்துக்கு என்ன பண்ணப்போறோம். மார்ச், ஏப்ரல் பசங்க ஸ்கூல் பீஸ் இருக்கே, நாளைக்கு கடைகள் எல்லாம் திறந்திருக்காதே, கையில காசு இல்லாமல் என்ன செய்வோம் என்று நிறைய குழப்பங்கள் இருக்கும். இதையெல்லாம் செய்ய வேண்டுமென்றால் உங்களது உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். அதனால் தான் இந்த இரண்டு வாரம் மிகவும் முக்கியமானது.

இந்த இரண்டு வாரத்தை குடும்பத்துடன் செலவிடுங்கள், படிக்க நினைத்த புத்தகம், பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்ட படம், கற்க நினைத்த இசை ஆகியவற்றிற்காக இந்த நேரத்தை செலவிடுங்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். குழந்தைகளை ஆன்லைன் கோர்ஸில் சேர்த்துவிடுங்கள். அவசர கால சமையல் செய்வது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். வீட்டிலேயே இருங்க… பத்திரமா இருங்க… நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என படித்ததை செயலுக்கு கொண்டு வரும் நேரமிது என்று பேசியுள்ளார்.

கமல் ஹாசனின் வீடியோ இதோ…