கொரோனா துயரில் நாய், பூனைகளுக்கு உணவு அளிக்க மறந்துவிடாதீர்கள் – மனிதம் ஒன்றே உலகைக் காக்கும்

0

கொரோனா துயரில் நாய் – பூனைகளுக்கு உணவு அளிக்க மறந்துவிடாதீர்கள் – மனிதம் ஒன்றே உலகைக் காக்கும்

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் தெருநாய், பூனைகளுக்கு பொதுமக்கள் முன்வந்து உணவு வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பூனைகளும், நாய்களும் உயிரிழந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெரு நாய்களும் பூனைகளும் உணவின்றி மடிந்தால் அதனால் உருவாகும் தொற்றுநோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தனித்துவிடப்பட்ட பூனைக்குட்டிகளும் நாய்க்குட்டிகளும் சீக்கிரத்தில் இறக்க வாய்ப்பு உள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். நாய்களும் பூனைகளும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து வருவதால் அவற்றை இறப்பில் இருந்து தடுக்க உணவும், தண்ணீரும் வீட்டு வாசலில் வைக்கும்படி விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.