கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் டோனட்ஸ் இலவசம் – அமெரிக்காவில் வினோத அறிவிப்பால் குவியும் கூட்டம்

0
13

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் டோனட்ஸ் இலவசம் – அமெரிக்காவில் வினோத அறிவிப்பால் குவியும் கூட்டம்

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. தற்போது ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் ஜோ பைடன் அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தற்போது வரை மொத்தம் 12 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அளவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் டோனட்ஸ் இலவசம் என்ற வினோத அறிவிப்பை அந்நாட்டில் உள்ள கிரிஸ்பி கீரிம் என்ற கடை அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அட்டையை காண்பித்த்தால் இலவச டோனட்ஸ் வழங்கப்படும் என அக்கடை தெரிவித்துள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்த ஆண்டு இறுதி வரை எத்தனை டோனட்ஸ் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பால் கடை முன்பு கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளனர்.