கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது – முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஐ.சி.எம்.ஆர் பாராட்டு

0

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது – முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஐ.சி.எம்.ஆர் பாராட்டு

கொரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக செய்ததற்காக முதலமைச்சர் பழனிசாமிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர் நிறுவனத்தை சேர்ந்த சென்னை இயக்குநர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குநர் பிரதீப் கவுர் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, கொரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னோடி நடவடிக்கைகளுக்கு இருவரும் பாராட்டு தெரிவித்தனர். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.