கொரோனா ஊரடங்கில் திரைப்பட விநியோகஸ்தர்கள் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டிய மூம்மூர்த்திகள்!

0

கொரோனா ஊரடங்கில் திரைப்பட விநியோகஸ்தர்கள் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டிய மூம்மூர்த்திகள்!

கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் பல விநியோகஸ்தர்களும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களின் பிரிதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாயினர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் வேலை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்கள் உண்ண உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழிலாளர்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு சென்னை காஞ்சிபுரம் திருவள்@ர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.ஏ.அருள்பதி, டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன், தனம் பிக்சர்ஸ் படூர் எஸ்.ரமேஷ் ஆகியோர் இணைந்து நலிந்த விநியோகஸ்தர்களுக்கு அரிசி மற்றும் ரொக்கம் வழங்க முன் வந்துள்ளனர்.

இவர்கள் நலிந்த விநியோகஸ்தர்கள் மற்றும் பிரிதிநிதிகளின் துயர் துடைக்க 350 மூட்டை அரிசியும், அவர்களின் குடும்ப செலவுகளுக்காக ரொக்கமும் வடபழனியில் உள்ள தனம் பிக்சர்ஸ் அலுவலகத்தில் வழங்கி வருகிறார்கள்.