கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

0

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

புதுடெல்லி: உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் வகிக்கின்றன. அமெரிக்காவின் அண்டை நாடான கனடா 12-வது இடத்தில் இருந்தது.

அந்த நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 71,157-ஆக இருந்தது. இந்நிலையில் கனடாவை விட குறைவான எண்ணிக்கையை கொண்டிருந்த இந்தியா, அந்த எண்ணிக்கையை நேற்று தாண்டியது.

இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 74,281 ஆக உள்ளது. இதனால் 11-வது இடத்தில் இருக்கும் சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா உள்ளது. சீனாவில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.