குடியரசு தினவிழா : தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

0
49

குடியரசு தினவிழா : தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது. பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள காவல் நிலையங்களில் மிகவும் சிறப்பாக பணிகளை செய்தல் குற்றங்களை குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றில் மத்திய அரசின் மூலம் வரையறுக்கப் பட்ட திறநளவிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையத்திற்கு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் அரசால் வழங்கப்பட்டன.

அதில் தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் தெற்கு நகர காவல் நிலை ஆய்வாளர் பி. பிச்சையா அவர்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பரிசுக்கான கோப்பையை வழங்கினார்.

இரண்டாவது இடத்தைப் பிடித்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் ஹேம மாலினி அவர்களிடம் தமிழக முதல்வர் இரண்டாவது பரிசுக்கான கோப்பையை வழங்கினார்.

மேலும் மூன்றாவது இடத்தை பிடித்த மதுரைமா நகரத்தை சேர்ந்த இ 3 அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் சாது ரமேஷ் அவர்களிடம் மூன்றாம் பருவத்துக்கான கோப்பையை தமிழக முதமைச்சர் வழங்கினார்.