கிரண்பேடி நாளை பதவி ஏற்பு: சூப்பர் ஸ்டார் ரஜினி – இளைய தளபதி விஜய்க்கு அழைப்பு

0

புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, நாளை மாலை 6.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடக்கும் இவ்விழாவில், அவருக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இவ்விழாவை முன்னிட்டு புதுச்சேரி கவர்னர் மாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் நேரில் வழங்கப்பட்டது. அதே போல் இளைய தளபதி விஜய் வீட்டிலும் அழைப்பு வழங்கப்பட்டது.