காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு – திட்டக் குழு அறிக்கை!

0
67

காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பு – திட்டக் குழு அறிக்கை!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால், குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநிலத் திட்டக் குழு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து 4 வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் 5 ஆய்வறிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலினிடம் மாநிலத் திட்டக்குழு செயல் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் சமர்ப்பித்தார். அதன்படி, நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, வேலைவாய்ப்புக் கொள்கை, நீர்வளக் கொள்கை, தெரு நாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக்கான வரைவுக் கொள்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளதாக மாநிலத் திட்டக்குழு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தால் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 27 புள்ளி 6 சதவீதம் பேரும் விவசாயம் அல்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 39 புள்ளி 3 சதவீதம் பேரும் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்கள் குறித்த நேரத்தில் கற்பதற்கு எண்ணும் எழுத்தும் திட்டம் வழிவகுப்பதாகவும் மாநிலத் திட்டக்குழு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.