கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?

0

கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?

இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலையில், அது கார்டியாக் அரெஸ்ட் எனப்படும். இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயிலோ அல்லது இதயத்திலிருந்து ரத்தம் வெளியேற்றும் குழாயிலோ அடைப்பு ஏற்பட்டால் அல்லது இதயத் தசைகளில் பிரச்னை ஏற்பட்டாலோ இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.

இதயத்தசைகளுக்கும் ரத்த ஓட்டம் தடைபடுவது, நாட்பட்ட இதயநோய் பிரச்னை இருப்பது, மரபணு ரீதியாக இதய பாதிப்பு ஏற்படுவது போன்றவை இந்த சிக்கலை உருவாக்கும்.

cardiac-arrest

நாட்பட்ட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் இதயச் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட அதிக சாத்தியம் உண்டு. நுரையீரலும் இதயமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது என்பதால் அதன் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால், சிறுநீரக கோளாறால் ஏற்படும் இதயநோய் சிக்கலை விட நுரையீரலால் இதயச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவது குறைவு என இதயநோய் நிபுணர்கள் விளக்கம் அளிக்கையில் கூறினர்.