காரட்லேன் தனிஷ்கின் 4வது சில்லறை விற்பனை ஸ்டோர் சென்னை அடையாறில் அறிமுகம்

0

காரட்லேன் தனிஷ்கின் 4வது சில்லறை விற்பனை ஸ்டோர் சென்னை அடையாறில் அறிமுகம்

காரட்லேன் தனிஷ்கின் கூட்டு நிறுவனம் இவர்கள் தெற்தில் தங்களது சில்லறை விற்பனையை விஸ்தரிப்பதற்காக 4வது ஸ்டோரை சென்னையில் அறிமுகப்படுத்துகிறார்கள்.

நவம்பர் 26 , 2019 – துரிதப்படுத்தப்பட்ட சில்லறை விற்பனையின் தொடர்ச்சியாக தனிஷ்க்கின் கூட்டு நிறுவனமான காரட்லேன் தனது நான்காவது ஸ்டோரை சென்னையில் அறிமுகப்படுத்தி தெற்கு பிராந்தியத்தில் அதன் ஸ்டோரின் எண்ணிக்கையை 24 ஆக அதிகரித்து உள்ளது. இந்த ஸ்டோரின் அறிமுகத்தின் மூலமாக இப்போது நாட்டில் மொத்தம் 79 ஸ்டோர்களுடன் காரட்லேன் தனது நிலையை உறுதி படுத்தி கொண்டுள்ளது.

சென்னையின் பிரதான குடியிருப்பு பகுதியான அடையாறில் நிறுவப்பட்டுள்ள காரட்லேனின் இந்த அவுட்போஸ்ட் தடையற்ற ஆபரணங்கள் வாங்கும் அனுபவத்தை வழங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் பேசிய கார்ட்லேனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு மித்துன் சசேத்தி அவர்கள் பேசுகையில் சென்னை எப்போதுமே எங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்துள்ளது மற்றும் இந்த நகரத்தில் உள்ள மற்ற மூன்று ஸ்டோர்களில் இருந்து எங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து எங்களது அடுத்த யதார்த்த நடவடிக்கை அடையாறில் இந்த ஸ்டோரை அறிமுகப்படுத்துவதே. இந்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தாரை இந்த ஸ்டோர் கவரும் மற்றும் இதற்காகவே அவர்களின் தேவைகளை மனதில் கொண்டே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

திரு சசேத்தி மேலும் கூறுகையில் வழக்கமான இந்திய ஆபரண ஸ்டோர்களில் இருந்து காரட்லேன் ஸ்டோர்கள் மிகவும் வித்தியாசமானவை . சாலிடேர்க்கு என்ற ஒரு பகுதி மற்றும் நிபுணர்கள் குழுவின் உதவிகளும் விசேஷமான அனுபவங்களை தந்திடும். சென்னை வாழ் மக்கள் முன்பு போல எப்போதும் இல்லாத வகையில் ஆபரணங்களை அடையாளம் காணும் ஒரு புதிய அனுபவத்தை பெற்றிட அவர்களை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம்.

இந்த அறிமுகத்தின் போது இருந்த காரட்லேனின் துணை நிறுவனர் திரு.குரு கீர்த்தி பேசும்போது , ‘ காரட்லேனின் டிசைன்கள் விலை குறைந்தபட்சமாக ரூ. 5000 முதல் தொடங்குவதால் , அவர்களால் பெருமளவிலான பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது. இந்த அறிமுகத்தை ஒரு பகுதியாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து வகை வைர டிசைன்கள் மீதும் சம அளவிலான 25% தள்ளுபடி சலுகையை இந்த ஸ்டோர் வழங்க இருக்கிறது என்று கூறினார் .

காரட்லேனின் தீவிர விசிறி நான் எனினும் எனது விருப்பமான பொருட்களை நேரில் சென்று பார்க்க நான் விரும்பும் சமயத்தில் இவர்களின் ஸ்டோர்களுக்கு சென்று வருவது என்பது மிகவும் நீண்ட பயணமாக இருக்கும். இப்போது அடையாறில் காரட்லேன் வந்திருப்பதால் ஆபரணங்களை வாங்குவதற்கான எனது விருப்பமான இடம் இப்போது எனது வீட்டிற்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. என்று சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் மிஸ். ரீத்தி அனேஜா கூறியுள்ளார்.

அழகு மிகுந்த ஆபரணங்கள் அனைவருக்கும் கிடைக்க வகை செய்யக்கூடிய தனது பயணத்தில் தனது வாடிக்கையாளர்கள் கொண்டாடுவதற்கான மற்றுமொரு காரணத்தை காரட்லேனின் புதிய ஸ்டோர் நிச்சயமாக வழங்கியுள்ளது.

ஸ்டோரின் விலாசம் :

G2 – A , G2 – B மற்றும் GI – B தரை தளம்
ராஜலக்ஷ்மி பேலஸ், 43 முதல் பிரதான விதி
காந்தி நகர், அடையாறு, சென்னை – 600020
ஸ்டோரின் வேலை நேரம் : காலை 11:00 மாலை 9:00
தொடர்பு எண் : 9500007183
செல்லவும் : www.Caratlane.com 

Highlights of the store launch: Ballet Collection, Noor-e-Kashmir Collection, Madhubani Collection, Fleur collection, Solitaire Counter,  A dedicated counter for gifting option, Try on Magic Mirror.