‘காட் ஃபாதர்’ திரை விமர்சனம்

0

‘காட் ஃபாதர்’ திரை விமர்சனம்

ரேட்டிங்

நட்டி நடராஜன், லால், அனன்யா, அஸ்வந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் காட் ஃபாதர். ஜிஎஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்தை ஜெகன் ராஜசேகர் இயக்கியுள்ளார்.

கதை:
சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பைப் லைன் துறையில் பணியாற்றும் பொறியாளர் அதியமான் (நட்டி), தன் மனைவி மித்ரா (அனன்யா), மகன் அர்ஜுன் (அஸ்வந்த்) சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இதே பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் மருதசிங்கம் (லால்), 13 வருடத்திற்கு பிறகு பிறந்த தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். ஓரு நாள் இதய நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் மருதசிங்கத்தின் மகன் அனுமதிக்கப்படுகிறான். மகனை காப்பாற்ற வேண்டும் என்றால் அவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும், மற்றும் அதே குரூப் ரத்தம் மற்றும் அதே வயதில் உள்ள சிறுவன் வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார். கரெக்ட்டான சிறுவனை தேடிப்பிடித்து அந்த சிறுவனை கொண்டு வர மருதசிங்கம் தன்னுடைய அடியாட்களுக்கு உத்தரவு போடுகிறார். அதியமானின் மகன் அர்ஜுனின் இதயம் பொருந்தும் என்பதை தெரிந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு அடியாட்கள் வருகிறார்கள். மருதுசிங்கத்தின் ஆட்கள் அஸ்வந்தை தேடி வரும் தகவலை அதியமானுக்கு தெரியவர தன் மகனின் உயிரை காப்பாற்ற போராடுகிறார். அதியமான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து யாரையும் உள்ளேயும் செல்லவிடாமலும், வெளியேயும் போகவிடாமலும் அராஜகம் செய்யும் மருதசிங்கம் மற்றும் அவனுடைய அடியாட்களிடம் இருந்து அதியமான் தன் மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.

பொறுப்பான கணவராகவும், அமைதியான பாசமான அப்பாவாகவும், தன் மகனை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சியிலும்; நேர்த்தியான நடிப்பை வெளிபடுத்த்pயிருக்கிறார் நட்ராஜ்.

அழகான மனைவி மித்ரா, அளவான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு சிறப்பு செய்துள்ளார் அனன்யா.

தான் நினைத்தவர்களை கொன்று குவிக்கும் தாதா மருதசிங்கத்தின் (லால்) மிரட்டல் எடுபடவில்லை. இப்படத்தில் குரல் மைனஸ்.

அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார் சிறுவன் அஸ்வந்த்.
ஒரு அபார்ட்மெண்டுக்குள்ளேயே ஓர் இரவில் நடைபெறும் கதைக்கு சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும், நவீன் ரவிந்திரனின் பின்னணி இசையும் படத்தின் ஒட்டத்திற்கு பெரிய பலம்.

ஒரே அப்பார்ட்மென்ட்டில் ஓர் இரவில் நடைபெறும் கதையை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக லாஜிக் மீறல்கள் இருந்தும் படத்தை கச்சிதமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகன் ராஜசேகர்.

மொத்தத்தில் ஜிஎஸ் ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் நிறுவனங்கள் தயாரித்துள்ள ‘காட் ஃபாதர்” மிரட்ட முயற்சித்துள்ளனர்.

நம்ம பார்வையில் ‘காட் ஃபாதர்” படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.