காட்டுக்குள் சடலத்தை வீசும், ‘வீடியோ’ தனியார் மருத்துவ கல்லுாரி விளக்கம்

0

காட்டுக்குள் சடலத்தை வீசும், ‘வீடியோ’ தனியார் மருத்துவ கல்லுாரி விளக்கம்

பொதுவெளியில் போடப்படுகிறதா கொரோனா சடலங்கள்? வீடியோவை சித்தரித்து வெளியிட்டிருப்பதாக குற்றச்சாட்டு

ஆள் நடமாட்டம் இல்லாத பொதுவெளியில் கொரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விசாரணையில் திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவமனையில் 73 வயதான முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்பதால், தாங்களே ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று, இருங்கலூர் மயானத்தில் ஆழமான குழி தோண்டி உடலை அடக்கம் செய்ததாக விளக்கமளித்துள்ளது.

மேலும், வீடியோவின் தொடர்ச்சியை வெளியிடாமல், சிலரால் சித்தரிக்கப்பட்டு இந்த வெளியிடப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.

இதையடுத்து முதியவரின் உடலை முறையாக அடக்கம் செய்யும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைத்திருப்பதாகவும், அந்த குழு அளிக்கும் தகவலின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.

அதேசமயம், உடலை அடக்கம் செய்யும்போது, அதற்கான பணியில் ஈடுபடுபவர்களும் பாதுகாப்பு உடையை அணிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் ஒருவர் மட்டுமே பாதுகாப்பு உடை அணிந்தபடியும், மற்றவர்கள் எந்தவித பாதுகாப்புமின்றி அடக்கம் செய்வது வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.