கலிபோர்னியாவில் மகாபெரியவா ஜெயந்தி விழா

0

சாக்ரமெண்டோ : கலிபோர்னியா தலைநகரம் சாக்ரமெண்டோவில், மே 22ஆம் தேதி மகாபெரியவா ஜெயந்தி “சாக்ரமெண்டோ மகாபெரியவா மண்டலி” சார்பாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

காலை சரியாக 8 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. குருவந்தனம், கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம், அபிஷேகம், குரு பாராயணம் , பஜனை, சங்கீதம், அர்ச்சனை என்று ஒன்றன் பின் ஒன்றாக அருமையாக நடந்தேறியது.

பூஜைகளை தொடர்ந்து, வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.