கருவறையில் வைத்து சண்டையிட்ட இரட்டைக் குழந்தைகள்

0
212

கருவறையில் வைத்து சண்டையிட்ட இரட்டைக் குழந்தைகள்

கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள், ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவது போன்ற காட்சியொன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சீனாவைச் சேர்ந்த தாவோ என்ற 28 வயதான நபர், தனது மனைவி கர்ப்பம் தரித்ததை அடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்கான அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்யப்பட்ட போது, அவரது வயிற்றினுள் இருந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இந்த காட்சியைப் பார்த்த மருத்துவர்கள் அதனை காணொளியாக பதிவு செய்து தத்தமது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தது அடுத்து, அந்த காணொளி வைரலாகி வருகின்றது.