கபாலி ரூ. 500 கோடி வசூலிக்கும்: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு  நம்பிக்கை!

0

பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வருகிற 22-ம் தேதி வெளியாகிறது.
அதே நேரத்தில் பெங்களூருவில் உள்ள குறிப்பிட்ட சில ஸ்டார் ஹோட்டல்களிலும் சிறப்புக் காட்சியாக இந்த படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கபாலி படத்தை சுற்றி எழுந்துள்ள எதிர்பார்பை வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ஒரு புது முயற்சியாக பெங்களூருவில் உள்ள குறிப்பிட்ட சில நட்சத்திர ஹோட்டல்களில் படத்தை திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சி நிறைவேறினால் இந்திய திரை உலக வரலாறில் இது ஒரு புதுமையான முன்னோடி முயற்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் புகழ்பெற்ற துறு ஆயசசழைவவ, டுயடவை யுளாழமஇ சுழலயட ழுசஉhனைஇ ஊசழறn Pடயணய ஆகிய பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ‘கபாலி” படம் அதிநவீன முறையில் திரையிடப்படுகிறது. இங்கு படம் பார்க்க வரும் ஒருவருக்கு ரூ.1300 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டிக்கெட் விலை மட்டுமே. மொத்தம் 3 நாட்கள் ஹோட்டல்களில் ‘கபாலி” படம் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
படத்தின் வசூல் குறித்து கலைப்புலி எஸ்.தாணு ஒரு பேட்டியில் கூறும்போது: உலகெங்கும் 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் கபாலி வெளியாகிறது. படவெளியீட்டுக்கு முன்பு ரூ.200 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளது. வெளியீட்டுக்குப் பின்பு ரூ. 500 கோடி வசூலிக்கும் என்று எண்ணுகிறேன். கபாலி, பாகுபலியை விடவும் பெரிய படம். காரணம், ரஜினி. எல்லா வயதுக்கும் ஏற்ற அவருடைய ரசிகர்கள் உலகெங்கும் உள்ளார்கள்.
நான் இன்னமும் தொலைக்காட்சி உரிமத்தை விற்கவில்லை. படவெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன். கேரள உரிமையை மோகன்லால் வாங்கியதும் எதிர்பாராதது. இதற்காகவே அவருடைய ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள். அடுத்ததாக ஹாலிவுட் படம் தயாரிக்க உள்ளேன். டிசம்பரில் இதன் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.