ஒரே நாளில் 30,000 முக கவசங்களை தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள்!

0

ஒரே நாளில் 30,000 முக கவசங்களை தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள்!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அனைவரும் தற்போது பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் முகக்கவசங்களின் தேவையும், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து தையல் பயிற்சி பெற்ற தமிழக சிறையில் உள்ள சுமார் 200 தண்டனை கைதிகள் மூலம் முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் சிறைத்துறையினர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். ஒரே நாளில் 30,000 முகக்கவசங்களை சிறைக் கைதிகள் மூலம் தயாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் முகக் கவசங்களைத் தயாரித்து, தமிழக சிறையில் உள்ள காவலர்கள் , தமிழக காவல்துறையில் உள்ள காவலர்கள், சிறை கைதிகள் அனைவரும் சிறையில் தயாரிக்கும் முகக் கவசங்களை பயன்படுத்துகின்றனர்.