”ஐஸ்வர்யா ராயும், மகளும் வீடு திரும்பியாச்சு” – அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி

0
140

”ஐஸ்வர்யா ராயும், மகளும் வீடு திரும்பியாச்சு” – அபிஷேக் பச்சன் நெகிழ்ச்சி

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக நடிகர் அபிஷேக்பச்சன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளான ஆராத்யா ஆகியோருக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளான ஆராத்யா ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளதாக நடிகர் அபிஷேக் பச்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் உங்களது பிரார்த்தனைகளுக்கும், அக்கறைக்கும் நன்றி. ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். நானும் எனது தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.