ஏன் இப்படி பண்றீங்க, உங்களுக்கு அறிவே இல்லையா? பேபி மானஸ்வி வீடியோ வைரல்

0

ஏன் இப்படி பண்றீங்க, உங்களுக்கு அறிவே இல்லையா? பேபி மானஸ்வி வீடியோ வைரல்

கொரோனா பற்றிய விழிப்புணர்வுக்காக பல பிரபலங்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இருப்பினும் தொடர்ந்து வெளியில் மக்கள் நடமாடுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களை திட்டி நடிகை பேபி மானஸ்வி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தவர் தான் மானஸ்வி.

“பத்திரிகை, டிவி என எல்லா இடங்களிலும் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஒரு தடவ சொன்ன நீங்க கேட்கவே மாட்டிங்களா?. வெளியே போவீங்க, எங்காவது தொட்டுவிட்டு மீண்டும் வேறொருவருக்கு பரப்புவீர்கள், அது பின்னர் இன்னொருவருக்கு பரவும். நீங்க வெளியில் போகாமல் இருந்தால் தானே கொரோனா குறையும். அதன் பிறகு தான் நாம் எல்லா இடத்திற்கும் போக முடியும். உங்களால் ஆபீஸ் போக முடியும், என்னாலும் ஸ்கூல் போக முடியும்.”

“மனசுக்குள்ள கொரோனா குறையனும்னு வேண்டினால் மட்டும் போதாது. அதற்கு வெளியில் போகாமல் இருக்கனும். நான் டிவியில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். குடும்பத்துடன் வெளியில் போகிறார்கள். அவர்களை போகவேண்டாம் என கையெடுத்து கும்பிடுகிறார்கள். ஏன் இப்படி பண்றீங்க. உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா?” என கேட்டுள்ளார் அவர்.